டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுபான கொள்கை வழக்கில் சிக்கிய அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை அமலாக்கத்துறை கைது செய்ததை அடுத்து அவர் கடந்த சில மாதங்களாக சிறையில் உள்ளார். இந்த நிலையில் அவருடைய நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து காணொளி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் அவருடைய நீதிமன்ற காவல் ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் சிபிஐ கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சிபிஐ கைது செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்குமாறு சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது/ இந்த வழக்கின் விசாரணை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.