Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

Hemant Soran

Senthil Velan

, புதன், 3 ஜூலை 2024 (20:44 IST)
ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கும் வகையில் ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். 
 
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் முதல்வராக இருந்து வந்தார். ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்தபோது ராஞ்சியில் 8.5 ஏக்கா் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
 
இந்த வழக்கில் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்த நிலையில் தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.  தான் வகித்த முதல்வர் பதவியை கட்சியின் மூத்த தலைவா் சாம்பாய் சோரன் அளித்துவிட்டு சென்றார். இதையடுத்து ஜாா்க்கண்ட் புதிய முதல்வராக சாம்பாய் சோரன் பதவியேற்றார்.

சில மாதங்களுக்குப் பிறகு ஜார்க்கண்ட் நீதிமன்றம் சோரனுக்கு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் பிணையில் வெளியே வந்தார். இந்த நிலையில்  முதல்வர் சாம்பாய் சோரன் வீட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்களின் குழு தலைவராகத் ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.


இதை அடுத்து, சம்பாய் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் இன்று மாலை அளித்தார். அப்போது ஹேமந்த் சோரன் தன்னை ஆட்சியமைக்க அழைக்கும் படி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து உரிமை கோரினார். அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் விரைவில் ஹேமந்த் சோரனுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!