Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

1 மது பாட்டில் வாங்கினால், 1 மதுபாட்டில் இலவசமா? அரசின் சலுகை அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் கண்டனம்..!

Advertiesment

Siva

, வியாழன், 27 மார்ச் 2025 (07:33 IST)
உத்தரப் பிரதேசத்தில் பல மதுக்கடைகளில் ‘ஒரு பாட்டில் வாங்கினால், ஒன்று இலவசம்’ என்ற சலுகை வழங்கப்படுவதால், அங்குள்ள கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
 
இதுபற்றி, ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும், டெல்லியின் முன்னாள் அமைச்சருமான அதிஷி, இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அவர் கூறியதாவது:
 
"உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருக்கும் யோகி ஆதித்யநாத் அரசு, மதுபானம் வாங்குவோருக்கு ‘1+1 இலவசம்’ சலுகை வழங்கி, குடிகாரர்களுக்கு மேலும் சலுகை வழங்கியுள்ளதா? உபியில் இலவச மது வாங்க மக்கள் வரிசையில் நெரிசலில் சிக்கிய வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இது பாஜகவின் அரசு ஊழலுக்கான உதாரணமா?" என்று கேள்வி எழுப்பினார்:
 
"பாஜக, ‘1 வாங்கினால் 1 இலவசம்’ சலுகையை ஊழல் என்று கூறும் போது, இதை யோகி ஆதித்யநாத் அரசு ஏன் நடைமுறைபடுத்தியது? மத்திய அரசின் அனுமதியோடு நடந்ததா? இல்லையென்றால், பாஜக இதற்கு எதிராக போராடுமா? சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் யோகியின் அலுவலகத்தில் எப்போது விசாரணை நடத்தும்?"
 
உபி அரசின் இவ்வகை அறிவிப்புகள், குடிபழக்கத்தை ஊக்குவிக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு