Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லி மாநில பட்ஜெட்.. பெண்கள் பாதுகாப்புக்கு மட்டும் ரூ.5100 கோடி ஒதுக்கீடு..!

Advertiesment
டெல்லி மாநில பட்ஜெட்.. பெண்கள் பாதுகாப்புக்கு மட்டும் ரூ.5100 கோடி ஒதுக்கீடு..!

Mahendran

, செவ்வாய், 25 மார்ச் 2025 (13:24 IST)
2025-26 ஆம் நிதியாண்டிற்கான டெல்லி மாநில பட்ஜெட்டை முதல்வர் ரேகா குப்தா, சட்டசபையில் இன்று  தாக்கல் செய்தார். 
 
26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக, தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.  
 
முந்தைய அரசின் கீழ் டெல்லியின் வளர்ச்சி பின்னடைவு கண்டது, யமுனை ஆற்றின் மாசு தாண்டிய அளவிற்கு அதிகரித்தது, சாலைகள் சேதமடைந்தன, காற்று மாசுபாடு கடுமையாக இருந்தது, மேலும் நகர நிர்வாகம் நிதி பற்றாக்குறையில் இருந்தது. ஆனால், பாஜக அரசு 10 முக்கிய துறைகளை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளது, குறிப்பாக  உள்கட்டமைப்பு மேம்பாடு,  மின்சாரம், குடிநீர், சாலை வசதி அபிவிருத்தியில் கவனம் செலுத்தியுள்ளதாக முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
 
மேலும் பெண்களின் பாதுகாப்புக்கு மட்டும் ரூ. 5,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் தான் மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,500 உதவித்தொகை  தரவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் பாதுகாப்புக்காக டெல்லி முழுவதும் 50,000 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
 
மேலும் பிரதம மந்திரி ஜன் தன் ஆரோக்கிய யோஜனா" திட்டத்திற்கு ரூ. 2,144 கோடி, 100 "அடல் கேன்டீன்கள்" அமைப்பிற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு, பொது போக்குவரத்தை மேம்படுத்த ரூ. 1,000 கோடி நிதியுதவி என்ற அறிவிப்புகளையும் முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1 மணி நேரத்தில் 8 இடங்களில் நகைப்பறிப்பு! விமான நிலையத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!