பாஜகவுக்கு எப்போதுமே ராகுல் காந்தி உதவி செய்து கொண்டிருக்கிறார் என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தியை சோதனைக்குரிய நபர் என்று கூறி, அவரால் பாஜகவின் வழிமுறைகள் மேலும் தெளிவாகின்றன என தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
“எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை உண்மையில் பாரத் தோடோ யாத்திரை ஆகிறது. அதாவது, அவர் இந்தியாவை இணைக்கவில்லை, பிளப்பதற்கான வேலை செய்யிறார்.
ராகுல், வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவைப் பற்றிக் கெட்ட வார்த்தைகள் பேசுகிறார். இந்த நாட்டு மக்கள் அவரின் உண்மையான நோக்கங்களை நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர். பாஜகவுக்குத் தெளிவான பாதையை உருவாக்க, ராகுல் போன்ற சில சோதனை நபர்கள் இருப்பது உதவியாக இருக்கிறது”.
அரசியல் லாபத்திற்காக காங்கிரஸ், சில பிரச்சினைகளை தேவையில்லாமல் பெரிதுபடுத்துகிறது. குறிப்பாக அயோத்தி ராமர் கோயில், முத்தலாக் தடைச் சட்டம், மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு போன்ற முக்கிய விவகாரங்களில் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? முத்தலாக்கை ஏன் ஒழிக்கவில்லை? கும்பமேளாவை ஊக்குவிக்க ஏன் முன்னுரிமை கொடுக்கவில்லை? உலகத் தரத்திலான உள்கட்டமைப்பை உருவாக்க, அவர்கள் ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.