Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருநாய் கடித்து 4 வயது சிறுமி பலி! விலங்குகள் நல ஆர்வலர்கள் மீது பொதுமக்கள் கோபம்..!

Siva
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (09:18 IST)
பெங்களூரு தவணாகிரே என்ற பகுதியை சேர்ந்த நான்கு வயது சிறுமி தெரு நாய் கடித்ததால் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி தெரு நாய் கடித்ததை தொடர்ந்து, சிறுமி கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நான்கு மாத சிகிச்சைக்கு பிறகும், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவரது மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.
 
தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பித்த போதிலும், அந்த உத்தரவுகளுக்கு எதிராக விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சிறுமியின் மரணத்தை தொடர்ந்து, தெரு நாய்களை கட்டுப்படுத்தத் தடையாக இருக்கும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மீது பொதுமக்கள் கடும் கோபமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், இதுபோன்ற ஒரு உயிர் இழப்பு, சமூகத்தில் ஒரு முக்கிய விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.
 
இந்த சம்பவம், நகர்ப்புறங்களில் தெரு நாய்களை நிர்வகிப்பது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள், விலங்குகள் நல ஆர்வலர்களின் போராட்டங்கள் ஆகியவற்றுக்கு இடையே பொதுமக்கள் பாதுகாப்பு எந்த அளவுக்கு உறுதிப்படுத்தப்படுகிறது என்பதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவ்வொரு தொகுதியிலும் உங்கள் திருட்டை கண்டுபிடிப்பேன்! - தேர்தல் ஆணையத்திற்கு ராகுல்காந்தி சவால்!

வாரத்தின் 2வது நாளிலும் பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

குடியரசு துணை தலைவர் தேர்தல்.. இந்தியா கூட்டணி வேட்பாளர் இன்று அறிவிப்பா?

தெருநாய் கடித்து 4 வயது சிறுமி பலி! விலங்குகள் நல ஆர்வலர்கள் மீது பொதுமக்கள் கோபம்..!

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்யும் சீனாவுக்கு வரி விதிக்காதது ஏன்? - ட்ரம்ப் உருட்டு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments