இங்கிலாந்து அணி நிர்வாகம் எப்போதும் கேப்டன்களை பதவியில் இருந்து தூக்குவதில் தயவு தாட்சண்யமேக் காட்டாது. அவர்களை பொறுத்தவரை தனி நபர்களை விட அணியே முக்கியம் என்ற கொள்கையுடையவர்கள். இதன் காரணமாக ஜோ ரூட்டை டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவைத்தார்கள்.
அதே போல டி 20 உலகக் கோப்பையைப் பெற்றுத்தந்த ஜோஸ் பட்லர் அதன் பின்னர் சரியாக விளையாடாத காரணத்தால் அவரிடம் இருந்து டி 20 கேப்டன்சி பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 17 ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிராகத் தொடங்கவுள்ள டி 20 தொடரில் அந்த அணிக்கு 21 வயது வீரர் ஜேக்கப் பெத்தல் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணியின் இளம் கேப்டன் என்ற சாதனையை பெத்தெல் பெற்றுள்ளார். இவர் கடந்த ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணிக்காகக் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.