Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓய்வு பெறும் முன் போலி சாவி தயாரித்த பேங்க் மேனேஜர்.. லாக்கர் கொள்ளையில் திடுக் தகவல்..!

Advertiesment
கனரா வங்கி

Mahendran

, சனி, 12 ஜூலை 2025 (11:31 IST)
கனரா வங்கியில் பணிபுரிந்த மேலாளர் ஒருவர், ஓய்வுபெறும் முன் லாக்கர்களுக்கான போலி சாவியைத் தயாரித்ததாகவும், அதன் பின் அவர் சதித் திட்டம் தீட்டி லாக்கர் கொள்ளையை நடத்தியதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள கனரா வங்கியில் கடந்த மே மாதம் லாக்கர் கொள்ளை நடைபெற்றது. இதில் மொத்தம் ரூ.53 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில், இந்த கொள்ளையில் முக்கியக் குற்றவாளி விஜயகுமார் என்பவர் என்றும், இவர் அதே வங்கியில் மேனேஜராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர் என்றும் தெரியவந்துள்ளது. தான் பணியில் இருந்தபோது லாக்கர்களுக்கான போலி சாவிகளை தயாரித்து, அதன் பின் ஒரு கும்பலை சேர்த்து இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
 
இதுவரை இந்தக் கொள்ளையில் மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 39 கிலோ நகை மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கொள்ளையில் இன்னும் சில குற்றவாளிகள் இருப்பதாகவும், அவர்களையும் விரைவில் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

14 வயது பள்ளி மாணவி கர்ப்பம்.. காரணம் அதே 14 வயது உடன் படிக்கும் மாணவர்.. அதிர்ச்சி தகவல்..!