Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

Advertiesment
தமிழக வெற்றிக் கழகம்

Siva

, வெள்ளி, 4 ஜூலை 2025 (15:45 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் இதோ:
 
.1. பரந்தூர் மக்கள் உள்பட விவசாயிகளின் நலன் மற்றும் உரிமைக்காகத் தமிழக வெற்றிக் கழகம் என்றும் துணை நிற்கும்.
 
2. கொள்கை எதிரிகளுடனோ, பிளவுவாத சக்திகளுடனோ என்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை.
 
3. விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரான அரசின் அதிகார மீறலைக் கண்டிக்கிறோம்! மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
 
4. நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
 
5. பெரும் நட்டத்தை சந்தித்துள்ள மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை தேவை.
 
6. மலைக்கோட்டை மாநகரில் நடக்கும் மணல் கொள்ளை தடுக்கப்பட வேண்டும்!
 
7. என்எல்சி-க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகை, குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக்க வலியுறுத்தி தீர்மானம்.
 
8. விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கைகளை முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றக்கோரி தீர்மானம்..
 
9. திண்டுக்கல் மாவட்டத்தில் வாசனைத் திரவிய ஆலை தொடங்கக் கோரும் தீர்மானம்.
 
10. தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். 
 
11.ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு.
 
12. அரசு மருத்துவர்களை நம்ப வைத்து ஏமாற்றாமல், கொடுத்த வாக்குறுதியின்படி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!
 
13. தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் ஒன்றிய அரசு கேட்டுப் பெற வேண்டும்!
 
14. இருமொழிக் கொள்கை தீர்மானம்..
 
15. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) நடத்துவதன் வாயிலாக சிறுபான்மையினர் வாக்குகளை குறைக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
 
16. கீழடியில் தமிழர் நாகரிகத்தை மூடி மறைக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்.
 
17. த.வெ.க.விற்கு எதிரான கபட நாடக தி.மு.க. அரசின் அராஜகப் போக்கிற்குக் கண்டனம்.
 
18. தொகுதி மறுசீராய்வு - ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம்.
 
19. காவல் துறை விசாரணையின் போது தொடர்ந்து பலர் கொல்லப்படுவதற்கும் அதனைத் தடுக்கத்தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத உள்துறை அமைச்சருக்கும் கண்டனம்.
 
20. பெரியார், அண்ணாவை அவமதிக்கும் பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியலைக் கண்டிக்கும் தீர்மானம் 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!