ஆந்திர மாநிலம் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திடீரென கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஆந்திரா மாநிலத்தில் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பெரும் பதட்ட நிலை உண்டாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக ஆந்திர மாநிலம் முழுவதும் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் பேருந்துகளும் தமிழ்நாடு எல்லைகளை நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஊழல் புகாரில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதாகவும் முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடு செல்வதில் பணத்தை முறைகேடு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளதாகவும் ஆந்திர மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.