Publish Date: Wed, 06 Sep 2023 (16:03 IST)
Updated Date: Wed, 06 Sep 2023 (16:04 IST)
ISIS அமைப்பின் தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் விசாரணையில் அந்த அமைப்புக்கு நிதி திரட்டுவது மற்றும் பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நிபில் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த ஆவணங்களில் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது ஆகியவை அம்பலம் ஆகியுள்ளது.
போலி ஆவணங்கள் மூலமாக நேபாளம் நாட்டிற்கு தப்பிச்செல்ல முயன்ற போது தான் என்.ஐ.ஏ அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்