Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''பேசியது போதும்... செயலில் இறங்குங்கள்''- புளூ சட்டை மாறன்

Advertiesment
''பேசியது போதும்... செயலில் இறங்குங்கள்''- புளூ சட்டை மாறன்
, வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (20:30 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால். இவர், நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸாக இருந்த படம் மார்க் ஆண்டனி.

ஆனால், பிரபல லைகா நிறுவனத்திற்கு விஷால்  தர வேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை  நீதிமன்றத்திற்குச் செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்த நிலையில்,  நடிகர் விஷால் இதுவரை செலுத்தாத காரணத்தால் அவரது மார்க் ஆண்டனி படத்தை வெளியிட சென்னை நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பிரபல சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன்,

’’உலக திரைப்பட ரிலீஸ் வரலாற்றில்.. இப்படியான விஷயங்கள் கோலிவுட்டில் மட்டுமே அதிகம் நடக்கிறது.

பழைய பாக்கிகளை முழுமையாக செட்டில் செய்யாமல்.. அடுத்த படத்தை முடித்து ரிலீஸ் வரை கொண்டு செல்லும் தயாரிப்பாளர் மற்றும் முந்தைய தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு வேறு படத்தில் சுறுசுறுப்பாக நடித்து முடிக்கும் நடிகர்கள் ஆகியோரிடம்.. நடிகர், தயாரிப்பாளர் உள்ளிட்ட சங்கங்கள் பேசி முன்பாகவே பிரச்னையை தீர்க்க வேண்டும்.

ஒத்துவராவிட்டால் புதிய படத்தை வெளியிட தடை போட வேண்டும். அதனால் ஏற்படும் நஷ்டத்தையும் அந்த நடிகரே தரவேண்டும். ஆனால் அந்த நடிகர்களே.. நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர்களாக இருந்தால்.. நீதிமன்றம் மட்டுமே சரியான நீதியை வழங்க முடியும்.

இதேபோன்ற நிலை இன்னும் தொடர்ந்து வருவது தமிழ் திரையுலக சங்கங்களின் இயலாமையையே காட்டுகிறது. இனியேனும் மாற்றம் வரும் என்று நம்பினால்.. வழக்கம்போல இருட்டுக்கடை அல்வா கிடைக்கவே வாய்ப்பு அதிகம். நிறைய பேசியது போதும். செயலில் இறங்குங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. சிறப்பான வரவேற்பு..!