உதயநிதி தலையை சீவி வந்தால் 10 கோடி என உத்தர பிரதேச மாநில சாமியார் அறிவித்திருந்த நிலையில் தற்போது உதயநிதி கன்னத்தில் காலணியால் அடித்தால் 10 லட்சம் என ஆந்திர மாநில இந்துத்துவ அமைப்பு ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சனாதனத்தை ஒழிப்போம் என பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி கன்னத்தில் காலணியால் அடித்தால் 10 லட்சம் பரிசு தரப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் படத்தையும் அவர் முகத்தில் காலணியால் அறைவது போன்ற படத்தையும் போட்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா தெருக்களில் போஸ்டர்களையும் அந்த அமைப்பு ஓட்டியுள்ளது. இது அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.