பீகார் மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. அதனால் அந்த மாநிலமே வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகிறார்கள். இந்நிலையில், வீடு வெள்ளத்தில் முழ்கியதால் ஒரு குடும்பத்தினரை பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் கடும் மழை பெய்துவருகிறது. இந்நிலையில் அங்குள்ள பகுதிகளில் எல்லாம் வெள்ளம் சூழ்ந்துவிட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கிய மக்களை பேரிடர் மீட்புக் குழுவினர் தேடிப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று, பாட்னாவில் உள்ள ராஜேதிர நகரில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர் வீடு முழுவதும் வெள்ளத்தில் முழ்கியதால் தவித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த மீட்புக் குழுவினர், அவர்களை வீட்டை விட்டு வெளியே வருமாறு கூறினர். ஒரு இளம் பெண்ணால் நடக்க முடியவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டு சுமந்து கழுத்தளவு இருந்த நீரில் வந்தனர். பின்னர் மீட்பு குழுவினர் வைத்திருந்த படகில் ஏறிக் கொண்டனர். இந்த வீடியோ பீகார் வெள்ளத்தின் கொடூரத்தையும் மக்களின் அவஸ்தையும் விவரிப்பதாக உள்ளது.