Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்கள் எல்லோரும் கார்ட்டூன் சேனல் பார்க்க வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ

பெண்கள் எல்லோரும் கார்ட்டூன் சேனல் பார்க்க வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ
, வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (20:55 IST)
பெண்கள் சீரியல் பார்க்காமல் கார்ட்டூன் அல்லது நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்தால், பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
 
 
மதுரையை அடுத்த பரவை அருகே உள்ள ஊர்மெச்சிகுளம் என்ற பகுதியில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: தொலைக்காட்சி சீரியல் தொடர்கள் பார்ப்பதை தவிர்த்து, கர்ப்பிணிப் பெண்கள் கார்ட்டூன் நிகழ்ச்சிகளையும் நல்ல நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும். இதனால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும் 
 
 
வயிற்றிலிருக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் அரசியல்வாதிகளாகவோ, பிரதம மந்திரியாகவோகூட ஆகலாம் என்பதால் அவர்கள் கருவில் இருக்கும்போதே பெண்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பிரசவ கால குழந்தை இறப்பு விகிதம் குறைவாக இருக்கின்றது’ என்று கூறினார்.
 
 
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு சீர்வரிசையுடன் கூடிய சத்துணவு பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டதா? டி.என்.பி.எஸ்.சி விளக்கம்