ஆர்மீனியா நாட்டில் வசித்து வருபவர் இளம்பெண் சாராடெனிக் கஸர்யான் ( 22). இவர் அழுதால் கண்களில் இருந்து கற்கள் வருகிறது.இதுகுறித்து அவர் டாகடர்களிடம் சிகிச்சை பெறச் சென்றர். ஆனால் டாக்டர்கள் இது என்ன நோய் எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
ஆர்மீனியா நாட்டில் வசித்து வருபவர் இளம்பெண் சாராடெனிக் கஸர்யான் ( 22). இவருக்கு கண்ணில் வலி ஏற்பட்டது. பின்னர்,. அவர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் சென்றார். அவரது கண்ணில் கண்டாடித் துண்டு இருப்பதாக கூறி மருத்துவர்கள் அதை அகற்றினர்ட்.அதன்பின்னர் மறுபடியும் சாராவுக்கு கண்ணில் வலி அதிகரித்துள்ளது. அதாவது தினமும் கண்களில் 50 கிரிஸ்டைல் கற்கள் வந்துள்ளது.
சாரா ஒரு ஏழைப்பெண் என்பதால் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று அவரால் சிகிச்சை பெற முடியவில்லை, ஆனால், இந்த கண்களில் கற்கல் ஏற்படும் வலியை அவரால் தாங்கவும் முடியவில்லை.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியுள்ளதாவது : உடலில் புரோட்டீன் அல்லது உப்புச் சத்து அதிகமானால், அது கண்ணீரை திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு மாற்றும் என கூறியுள்ளனர். மேலும் இப்பெண்ணுக்கு வந்துள்ள நோயை உடனே கண்டறிந்து சரிசெய்வது அவசியம் என எச்சரித்துள்ளார். உந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.