Publish Date: Fri, 13 Aug 2021 (18:09 IST)
Updated Date: Fri, 13 Aug 2021 (18:11 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் இந்த சிறை தண்டனையை முடித்து விட்டு சமீபத்தில்தான் சசிகலா விடுதலை பெற்றார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சசிகலா சிறை தண்டனை அனுபவித்த போது, சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வசதியை பெற்றார் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது
இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி பார்ப்பனர்கள் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகள் பெற்றது தொடர்பான வழக்கில் ஊழல் தடுப்பு படை போலீசார் வரும் 25ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது