இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கபடுவதாக தகவல் வெளியாகிறது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டில் முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக். பல ஆண்டுகள் ஆனாலும் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் மட்காமல் இருப்பது விவசாயம் மற்றும் நீர் நிலைகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் அடுத்தாண்டு( 2022) ஜுலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.