வேளாண் பொருட்களுக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, பஞ்சாப், ஹரியானா எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டம் 55வது நாளை அடைந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் உடல்நிலை மோசமானதால், அவரை மருத்துவமனையில் சேர்க்கவும், அதிகாரிகள் குழு விவசாயிகளுடன் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தவும் நேரிட்டது.
பேச்சுவார்த்தையின் பின்னர், மத்திய அரசு பிப்ரவரி 14 ஆம் தேதி சண்டிகரில் விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உறுதி அளித்தது. இதையடுத்து, விவசாயிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
காவல் கண்காணிப்பாளர் அனைத்து விவசாயிகளுக்கும் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்தார்.