Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் விவசாயி கவலைக்கிடம்: மாரடைப்பு அபாயம் என தகவல்..!

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் விவசாயி கவலைக்கிடம்: மாரடைப்பு அபாயம்  என தகவல்..!

Mahendran

, புதன், 25 டிசம்பர் 2024 (13:19 IST)
பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் விவசாயி ஒருவர் 29வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து வரும் நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப், ஹரியானா மாநில எல்லையில், பஞ்சாப் விவசாயி ஒருவர் நவம்பர் 26 ஆம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். 70 வயதான அவர், உண்ணாவிரதம் தொடங்கியதிலிருந்து 15 கிலோ எடை குறைந்து விட்டதாகவும், புற்றுநோயாளியாக இருந்தும் அவர் விடாப்படியாக உண்ணாவிரதம் இருந்து வருவதை சந்தித்து அவரது உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதே நிலை தொடர்ந்தால், அவருக்கு மாரடைப்பு ஏற்படலாம் என்றும் முக்கிய உறுப்புகள் செயல் இழக்கும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைந்து வருவதால் நிலைமை மோசமாக இருக்கிறது என்றும், அவரது நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிகுறித்து வருகின்றனர்.

ஆனால், விவசாயிகளின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்கும் வரை உண்ணாவிரதம் தொடரப்போவதாக அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண் ஆசிரியருக்கு மகப்பேறு விடுமுறை அளித்த அரசு பள்ளி.. வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்..!