பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் நேற்று நடந்த சிறப்பு கூட்டத்தில், ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக, ராமதாஸின் மகள் வழி பேரன் பரசுராம் முகுந்தனை நியமித்தது தொடர்பாக, அன்புமணி மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதற்கு ராமதாஸ் எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
"கட்சியில் சேர்ந்த நான்கு மாதங்கள் ஆனவர்க்கு பதவி எதற்கு? எனக்கு உதவியாக யாரும் தேவையில்லை," என்று அன்புமணி கூறியதாகவும், "முகுந்தன் தான் பாமக இளைஞரணி தலைவர்," என ராமதாஸ் உறுதியாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் தொண்டர்கள் என்னை சந்திக்கலாம் என்று அன்புமணி கூறியதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இன்று ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் நேரில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், தங்கள் இடையே உள்ள முரண்பாடுகளை இந்த பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.