தேர்தல் வியூகம் மன்னன் பிரசாந்த் கிஷோர் திடீரென பீகாரில் சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து பாட்னாவில் உள்ள காந்தி வயதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜன சுராஜ் என்ற கட்சியை தொடங்கிய பிரசாந்த் கிஷோர் பீகார் மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தில் மோசடி நடந்ததை அடுத்து அந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உண்ணாவிரதம் இருந்துள்ளார்.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் சாகும் வரை உண்ணாத போராட்டம் என்று அறிவித்து அவர் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ள நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டிசம்பர் 13ஆம் தேதி நடந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிய தேர்வை நடத்த வேண்டும் என்றும், இந்த தேர்வில் ஊழல் செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிரசாந்த் கிஷோர் திடீரென அரசியல் கட்சி தொடங்கி, சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு, மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.