Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை வெளியாகும் 5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு!.. எங்களோடு இணைந்திருங்கள்!..

Advertiesment
exit poll
Exit Poll 2026: அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் என 5 மாநில சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அதில் அசாமில் 121 தொகுதிகளுக்கான தேர்தலில் 86 சதவீத வாக்குகள் பதிவானது. மேற்கு வங்காளத்தில் 93.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது. 234 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் 85.15 சதவீத வாக்குகளும், கேரளாவில் 75 முதல் 78 சதவீத வாக்குகளும், புதுச்சேரியில் 89.87 சதவீத வாக்குகளும் பதிவாகியிருக்கிறது..

வழக்கம்போல் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை பல ஊடகங்களில் வெளியானது.  தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ஏப்ரல் 29ம் தேதியான நாளை 6.30 மணிக்கு மேல் வெளியாகவுள்ளது. ஏனெனில் நாளை மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தையை கருத்துக்கணிப்பை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

எனவே நாளை 6:30 மணிக்கு மேல் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும், எந்த கட்சி எவ்வளவு வாக்குகளை வாங்கும் என்கிற சரியான தகவல்களுடன் கூடிய கருத்துக்கணிப்பை நீங்கள் எங்கள் வெப்துனியா.காம் (www.webdunia.com) இணையதளத்தில் பார்க்கலாம். எனவே, எங்களோடு இணைந்திருங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்.. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெயர் பதிவு..!