சமீபத்தில் மத்திய அரசால் பதவி பறிப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதில் பிரதமர் மோடி செய்த மாற்றம் குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியுள்ளார்.
மக்களால் தேர்வு செய்யப்படும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குற்ற வழக்குகளில் 30 நாட்களுக்கும் அதிகமாக சிறை தண்டனை பெற்றிருந்தால் அவர்களது பதவியை பறிப்பதற்கான புதிய சட்ட மசோதாவை மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
ஆனால் இந்த சட்டத்தின் மூலம் எதிர்கட்சிகள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை விதித்து உறுப்பினர்களின் பதவியை பறிக்க பாஜக திட்டமிடுவதாக எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
ஆனால் இந்த சட்டம் அரசியல்வாதிகளாக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் தப்ப முடியாது என்பதை காட்டவும், சமரசமற்று பிரதமராகவே இருந்தாலும் சரியான நடவடிக்கையை மேற்கொள்ளவும் வழிவகுப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியுள்ளார். இதுபற்றி பேசிய அவர் “பதவி பறிப்பு மசோதாவில் முதலில் பிரதமர் பதவி இடம்பெறவில்லை. ஆனால் மசோதாவை பார்வையிட்ட பிரதமர் மோடி, பிரதமரும் ஒரு குடிமகன்தான். அவருக்கு ஊழல் குற்றச்சாட்டில் சிறப்பு பாதுகாப்பு இருக்கக்கூடாது என்று கூறி மசோதாவில் பிரதமர் பதவியும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என கூறிவிட்டார். அதற்கு பின்னரே பிரதமர் பதவியும் அதில் சேர்க்கப்பட்டது” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K