இன்ஸ்டா ரீல் மோகத்தில் பணத்தை அள்ளி வீசிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இன்றைய காலத்தில் சமூக வலைதளங்கள் மலிந்துள்ள நிலையில் தினமும் மக்கள் இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் பார்ப்பதும், அதில் தங்கள் வீடியோவை பதிவேற்றுவதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதில், பல ஆயிரம், லட்சம், வியூஸுகள் பெறவும், மில்லியன் கணக்கில் வியூஸை பெற வேண்டி பல விபரீத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மாளவியா நகரின் உள்ள கெளரவ் டவருக்கு வெளியே மணி ஹீய்ஸ்ட் என்ற வெப் தொடர் பாணியில் ஒரு நபர் காரின் மீது ஏறி நின்று கொண்டு, மக்களை நோக்கி ரூ.10 மற்றும் ரூ.20 நோட்டுகளை வீசினார்.
இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.