இந்தியாவில் தெரு நாய்களை விட அதிகமாக அமலாக்கத்துறை தான் அலைகிறது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆவேசமாக பேசி உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென ரெய்டு செய்தனர். இந்த ரெய்டு குறித்து முதல்வர் அசோக் கெலாட் பேசிய போது இந்தியாவில் தெரு நாய்களை விட அமலாக்கத்துறை அதிகாரிகள் தான் அதிகமாக அலைகின்றனர்.
அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்பின் தலைவர்களை சந்தித்து பேச நான் நேரம் கேட்டிருந்தேன், ஆனால் இதுவரை நேரம் கிடைக்கவில்லை.
பிரதமர் மோடி ஆட்சியின் கவுண்ட்டவுன் எண்ணப்பட்டு வருகிறது விரைவில் அவருடைய ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும் என்று கூறினார்
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் நவம்பர் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva