Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது சொத்துகுவிப்பு வழக்குப் பதிவு

rameshwara murugan
, வெள்ளி, 13 அக்டோபர் 2023 (12:54 IST)
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் ராமேஸ்வர முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ராமேஸ்வர முருகன்.

இவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் வருமானத்திற்கு அதிகமான 354 சதவீதம் சொத்துகள் சேர்த்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி, தந்தை, தாய் மாமனார் மற்றும் மாமியார் உள்பட 6 பேர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்.. மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு முக்கிய தகவல்..!