மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஆசிய கோப்பை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவிருக்கும் நிலையில், ஹேக் செய்யப்பட்ட அவரது பக்கத்தில் பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகளின் கொடிகள் பதிவிடப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வு குறித்து சைபர் கிரைம் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. ஷிண்டேவின் எக்ஸ் கணக்கை கவனித்துக்கொள்ளும் குழு, சுமார் 30 முதல் 45 நிமிடங்களில் கணக்கை மீட்டெடுத்ததாக ஒரு சைபர் கிரைம் அதிகாரி தெரிவித்தார்.
ஹேக் செய்யப்பட்ட பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த படங்கள், சில நிமிடங்கள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.