மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட பவ் லாக்கே என்ற இளைஞர், இறுதி சடங்கின்போது திடீரென கை, கால் அசைவுகளை ஏற்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தி, மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்கினர்.
நாசிக்கில் ஒரு விபத்தில் சிக்கிய இந்த இளைஞரை, மருத்துவர்கள் பரிசோதனை செய்து மூளைச்சாவு அடைந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்து கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு கை, கால் அசைவுகள் இருந்தது. இந்த இன்ப அதிர்ச்சியால் பெற்றோர் மீண்டும் தங்கள் மகன் உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கை பெற்றுள்ளனர்.
இந்த செய்தி, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம், மருத்துவ உலகில் ஒரு அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.