Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Advertiesment
விவாகரத்து

Siva

, வெள்ளி, 18 ஜூலை 2025 (08:19 IST)
மும்பையை சேர்ந்த ஒரு ஜோடி கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், 2014 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதனை அடுத்து, 2015 ஆம் ஆண்டு அவர்களது விவாகரத்து தொடர்பான வழக்குகள் தொடங்கின. இந்த நிலையில், குடும்ப நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டில் இருவருக்கும் விவாகரத்து அளித்து தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து மனைவி மேல்முறையீடு செய்த நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், கணவருக்கு கொடுக்கப்பட்ட விவாகரத்து உறுதி செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 
"வீட்டில் தான் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், வீட்டு வேலைகள் செய்ய கட்டாயப்படுத்துவதாகவும், பரஸ்பர விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள அழுத்தம் கொடுத்ததாகவும்" மனைவி அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார். மேலும், தனது நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கணவன் குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
 
ஆனால், கணவர் தரப்பில், "தங்கள் வீட்டில் பல வேலைக்காரர்கள் இருக்கிறார்கள் என்றும், எனவே தனது மனைவி வேலை செய்ய கொடுமைப்படுத்தப்படுகிறார் என்பது உண்மைக்கு மாறானது" என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், "தனது சகோதரி மாற்றுத்திறனாளி என்றும், அவரை கேவலமாக தனது மனைவி நடத்துவதாகவும், உடல் ரீதியான நெருக்கத்திற்கு மறுத்ததாகவும், தன் மீது தவறான தகாத குற்றச்சாட்டுகளை கூறியதாகவும்" கூறப்பட்டிருந்தது. மேலும், மனைவி தன்னுடன் வர விரும்பினால் அதற்கு தனிக்குடித்தனத்திற்கும் தயாராக இருப்பதாகவும், தனி வீடு பார்த்ததாகவும், ஆனாலும் மனைவி தன்னுடன் வாழ வரவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கணவனுக்கு மனைவி கொடுமைப்படுத்தியது உறுதி செய்யப்பட்டதாக கூறி விவாகரத்தை உறுதி செய்தது. அதுமட்டுமின்றி, மனைவியின் கோரிக்கையான மாதம் ஒரு லட்ச ரூபாய் பராமரிப்பு தொகையையும் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மனைவிக்கு கணவனுடன் வாழ வேண்டும் என்ற உண்மையான ஆர்வம் இல்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் வெட்டி கொலை.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!