நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்ய போவதாக கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த திருமண நிகழ்வு குறித்த ஆவணப்படமும் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியானது. அதன் பின்னர் இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், அவர்களுக்கு உயிர், உலகம் என பெயரிட்டனர்.
இந்த நிலையில், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விவாகரத்து செய்ய இருப்பதாக வதந்திகள் பரவிய நிலையில், விக்னேஷ் சிவன் மேல் உட்கார்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை நயன்தாரா பதிவு செய்து, "எங்களை பற்றிய வதந்திகளை பார்க்கும்போது எங்களுடைய ரியாக்ஷன் இதுதான்" என்று காமெடியாக பதிலளித்துள்ளார்.
இதன் மூலம் தங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை நயன்தாரா மறைமுகமாக உறுதிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னராவது இருவருக்கும் இடையே விவாகரத்து வதந்தி முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.