Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாழ்க்கை நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்து செல்கிறது.. கணவரை பிரிந்ததாக அறிவித்த சாய்னா நேவால்

Advertiesment
சாய்னா நேவால்

Siva

, திங்கள், 14 ஜூலை 2025 (07:40 IST)
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவரும், இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தவருமான சாய்னா நேவால், தனது கணவர் பருப்பள்ளி காஷ்யப்பை பிரிவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அவர் தனது சமூக வலைத்தளத்தில், "சில சமயங்களில் வாழ்க்கை நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்து செல்கிறது. நிறைய யோசித்து, கலந்தாலோசித்து, அதன் பிறகுதான் நான் என் கணவரை பிரிய முடிவு செய்துள்ளேன். எங்கள் இருவரின் அமைதி, வளர்ச்சி மற்றும் எதிர்கால நன்மையை கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம். எனவே, எங்களது தனிப்பட்ட விஷயங்களை புரிந்துகொண்டு எங்களை மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவு செய்துள்ளார்.
 
கடந்த 2018 ஆம் ஆண்டு சாய்னா நேவால், பருப்பள்ளி காஷ்யப்பை திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஹைதராபாத்தில் உள்ள அகாடமி ஒன்றில் பயிற்சி பெற்றபோது நட்பாக பழகினர். அதன் பின் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சாய்னா ஒரு பக்கம் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்றபோது, காமன்வெல்த் போட்டிகளில் அவரது கணவர் தங்கப்பதக்கம் பெற்றார். இந்த நிலையில், தற்போது இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய பவுலிங் அபாரம்.. வெற்றிக்கு தேவை 135 ரன்கள் தான்.. இன்றைய கடைசி நாள் த்ரில் தான்..!