Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய அரசை கண்டித்த நீதிபதி இரவோடு இரவாக மாற்றம்! அதிர்ச்சியில் நீதித்துறை

மத்திய அரசை கண்டித்த நீதிபதி இரவோடு இரவாக மாற்றம்! அதிர்ச்சியில் நீதித்துறை
, வியாழன், 27 பிப்ரவரி 2020 (07:53 IST)
மத்திய அரசை கண்டித்த நீதிபதி இரவோடு இரவாக மாற்றம்
நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெல்லி வன்முறை குறித்து நடந்த வழக்கு ஒன்றில் அதிரடியாக சில உத்தரவுகளை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் என்பது தெரிந்ததே.. குறிப்பாக மத்திய அரசை கடுமையாக விளாசிய நீதிபதி, வன்முறையை தூண்டும் விதமாக பேசிய பாஜக தலைவர்களை கைது செய்யாதது ஏன்? என காவல்துறைக்கு அவர் காட்டமான கேள்வி எழுப்பினார். வன்முறையை கட்டுப்படுத்தாமல் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததாகவும் ஆரம்பித்திலேயே காவல்துறை நினைத்திருந்தால் இந்த கலவரத்தை கட்டுப்படுத்தி இருக்கலாம் என்றும் முழுக்க முழுக்க காவல் துறையின் அலட்சியத்தால் தான் இந்த வன்முறை நிகழ்ந்ததாகவும் நீதிபதி முரளிதரராவ் கடுமையாக சாடினார் 
 
மேலும் உடனடியாக காவல்துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுத்து வன்முறையை தூண்டும் விதமாக பேசிய பாஜக தலைவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவு பிறப்பித்தார். அதுமட்டுமின்றி முதல்வர் உள்பட உயர் அதிகாரிகள் கலவர இடத்திற்கு உடனடியாக பார்வையிட செல்ல வேண்டும் என்றும் பலியானவர்களுக்கு பாதுகாப்பாக இறுதி மரியாதை நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்
 
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர்ராவ் அவர்களின் இந்த உத்தரவால் பாஜக அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரவோடு இரவாக  நீதிபதி முரளிதர்ராவ் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மத்திய அரசின் இந்த உத்தரவு பாசிச நடவடிக்கை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது நீதித்துறையிலும் மத்திய அரசு தனது வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டதாக அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர் 
webdunia
மத்திய அரசை கண்டித்த நீதிபதி இரவோடு இரவாக மாற்றம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் ஹாசன்: "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்"