Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பரப்பிய மாணவி! – பழிவாங்க நடந்த பகீர் சம்பவம்!

Advertiesment
Delhi student
, புதன், 22 பிப்ரவரி 2023 (12:37 IST)
டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பரப்பிய சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் தனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மர்ம நபர்கள் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், புதிய எண்களில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் படங்கள் வெளியிடப்பட்ட ஐபி அட்ரஸை வைத்து குற்றவாளியை தேடினர். அதில் கல்லூரி படிக்கும் இளம்பெண் ஒருவர்தான் இதை செய்தார் என்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக அந்த பெண்ணை கைது செய்து போலீஸார் விசாரித்ததில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.

கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமான உடல்களுடன் மார்பிங் செய்து முன்னதாக இளைஞர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த இளைஞரை பழிவாங்க துடித்த கல்லூரி மாணவி, இளைஞரின் சகோதரியான அந்த இளம்பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் எடுத்து மார்பிங் செய்து பரப்பியுள்ளார்.

இளைஞர் ஒருவர் செய்த தவறுக்காக அவரது சகோதரியின் மார்பிங் படங்களை மற்றொரு பெண்ணே பகிர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் அனுமதியின்றி பேரணி.. அண்ணாமலை மீது வழக்குப்பதிவு..!