மேகாலயாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவு எந்திரம் குறித்து சர்ச்சை வீடியோ வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேகாலயா மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் கட்சி, காங்கிரஸ், பாஜக ஆகிய பெரும் கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் மேகலயாவில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவது போல அமைக்கப்பட்டுள்ளதாக நபர ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேகாலயா பாஜகவினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலி வீடியோ பரப்பிய போலாங் ஆர் சர்மா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குப்பதிவு எந்திரங்கள் நம்பகமானவை என்றும், வீடியோவில் கூறப்படுவது போல அதில் மாற்றங்கள் செய்யமுடியாது என்றும் தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.