சத்துணவு திட்டத்தில் வழங்கப்பட்ட சிக்கனில் லெக் பீஸை திருடிய ஆசிரியர்களை பெற்றோர்கள் பூட்டி வைத்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
	
 
									
										
								
																	
	
	மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலாக மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் சிக்கன் மற்றும் பழங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சிக்கன் மற்றும் பழங்களை மாணவர்களுக்கு சரியாக வழங்காமல் பல இடங்களில் ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் முறைகேடுகள் செய்வதாக புகார்கள் உள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	மேற்கு வங்கத்தில் மால்டா மாவட்டத்தில் உள்ள இங்கிலீஷ் பஜார் பகுதியில் முதன்மை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தில் சிக்கன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் சிக்கன் லெக் பீஸ் உள்ளிட்டவற்றை ஆசிரியர்கள் எடுத்துக் கொண்டு, கோழியின் கழுத்து மற்றும் பிற பகுதிகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
 
									
										
			        							
								
																	இதுகுறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து பள்ளிக்கு சென்ற பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் 6 ஆசிரியர்களை அறை ஒன்றிற்குள் அடைத்து பூட்டியுள்ளனர். பின்னர் அங்கு வந்த போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அறையை திறந்து விட்டுள்ளனர். சிக்கன் பீஸால் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.