Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் அமிதாப் பச்சன் வீடு அருகில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை....ஒருவர் கைது

Advertiesment
abuse
, சனி, 18 பிப்ரவரி 2023 (16:48 IST)
மஹாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் ஜூகு பகுதியில் நடிகர் அமிதாப் பச்சன் வீட்டிற்கு அருகில் இளம்பெண் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எதிர்ப்பு அணியின் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள மும்பை நகரின் ஜூகு என்ற பகுதியில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பிரதீக்சா என்ற பங்களா இருக்கிறது.

இந்த பங்களா அமைந்திருக்கும் வழியாக நேற்று இரவு ஒரு ஆட்டோ சென்றுள்ளது.

அப்போது, வழியில் ஒருவர் ஆட்டோவில் ஏறி அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்துவிட்டு, தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், அரவிந்த் அஜய் வகேலா (47) என்ற நபரைக் கைது செய்துள்ளனனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததை ஒப்பு கொண்டுள்ளார்.

இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாடு ஒரே வரி திட்டம்; தமிழக நிதியமைச்சர் பிடிஆர் கருத்து..!