Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு முடிந்தது.. இனி கண்டுபிடிக்கப்பட்டால் கைது?

Mahendran
வெள்ளி, 2 மே 2025 (10:31 IST)
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த காலக்கெடு தற்போது முடிவடைந்துவிட்டது. இதனையடுத்து, அட்டாரி-வாகா சர்வதேச எல்லை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இனிமேல் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் கண்டுபிடிக்கப்படின் அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் இதுவரை 911 பாகிஸ்தானியர்கள் வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர். அதேபோல், 1617 இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர்.
 
இந்த நிலையில், நீண்டகால விசாக்களுடன் இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற காலக்கெடு இன்றுடன் முடிவடைந்துவிட்டது.  
 
மேலும், இந்தியாவில் பாகிஸ்தானியர்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் கைது செய்யப்படவோ அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்படவோ வாய்ப்பு உள்ளதாக  கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு முடிந்தது.. இனி கண்டுபிடிக்கப்பட்டால் கைது?

போர் பதட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை.. மீண்டும் உச்சம் செல்லும் இந்திய பங்குச்சந்தை..

தங்கம் விலை தொடர் சரிவு.. ஒரு சவரன் ரூ.70,000க்கும் கீழ் வந்துவிட்டதா?

ஓலா, உபேர் டிரைவர்கள் Rideஐ கேன்சல் செய்தால் பயணிக்கு நஷ்ட ஈடு: அதிரடி உத்தரவு..!

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம்! குவியப்போகும் பக்தர்கள்! - சிறப்பு பேருந்துகள், ஏற்பாடுகள் தீவிரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments