இறந்த மாமியாரின் உடலை தூக்கிச் சென்ற மருமகள்கள்.. நெகிழ்ச்சியான சம்பவம்

செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (18:21 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில், இறந்த மாமியார் உடலை, நான்கு மருமகள்கள் இணைந்து தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தொலைக் காட்சித் தொடர்களில், மாமியார் மருமகளுக்கு இடையில் போட்டி, பொறாமை, போன்ற காட்சிகளை உருவாக்கிவருகின்றனர். அதைப் பார்ப்பதற்கும் பெருமளவும் மக்கள் , சரியான நேரத்துக்கு தயாராகிவிடுகின்றன. இந்த மாமியார் மருமகள் இடையேயான மோதலுக்கு இந்த தொலைக்காட்சி தொடர்களும் ஒருவகையில் காரணமாகிறது.
 
இந்த நிலையில், மகாராஷ்டிராவில், நேற்று மரணமடைந்த, சுந்தர்பாய் நெய்க்வடே என்ற பெண் தனது 83 வயதில் காலமானார். இந்நிலையில் அவரது கண்களை தானமாக அவரது குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு சுந்தர்பேயின் கணவர் இறந்த போது, அவரது கண்களையும் தானம், செய்துள்ளனர்.
 
சுந்தர்பாய் நெய்க்வடே ,உயிருடன் வாழும்போது, தனது 4 மகன்கள்,4 மருமகள்கள், அவர்களின் குழந்தைகள் ஆகியோர் மீது அளவில்லாத பாசம் கொண்டவராக இருந்துள்ளார். எனவே, நேற்று தனது இறுதிநாளை முடிந்து கண்ணை மூடினார். இன்று அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. அப்போது, 4 மருமகள்களும் கண்ணீருடன் பாசம் தழுதழுக்க.. மயானத்திற்குப் பாதி தூரம் மாமியாரை உடலைச் சுமந்துகொண்டு சென்றனர். அதன்பின்னர் ஆண்கள் அவர்களிடமிருந்து சுந்தர்பாய் நெய்க்வடேயின் உடலை வாங்கி, மயானத்திற்குக் கொண்டு சென்றனர். மாமியாரில் இறந்த உடலை 4 மருமகள்களும் சேர்ந்து தங்கள் தோளில் வைத்துத் தூக்கிச் சென்ற சம்பவம் எல்லோருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா விருப்பம்!