வரதட்சனை கொடுமை... மாமியாரின் மூக்கை கடித்த மருமகன்... காதை வெட்டிய தந்தை

செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (16:15 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் நகட்டியா என்ற பகுதியில் வசித்து வருபவர் கந்த ரகுமான். இவரது மகள் சாந்த்பி. தன் மகளை முகமது அஷ்பாக் என்பவருக்கு ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். அப்போது வரதட்சனையாக ரகுமான் ரூ, 10 லட்சம் கொடுத்துள்ளார்.
அதன்பின்னர் ஒரு வருடம் கழித்து முகமது அஷ்பாக்  தன் மனைவி சாந்த்பியிடன் இன்னும் ரூ. 5 லட்சம் பணம் வாங்கிவருமாறு கேட்டுள்ளார். அதற்கு ரகுமான் கொடுக்க முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது. அதனால் ஆத்திரமடைந்த முகமது அஷ்பாக், மனைவியை அடித்து துன்புறுத்தி கொடுமை செய்துள்ளார்.
 
இதுகுறித்து ரகுமானுக்கு தகவல் தெரிய, தன் மனைவி குல்ஷானுடன் மகளைப் பார்க்க சென்றுள்ளார். அங்கு இருவீட்டாரும் பேசிய போது ம் கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது கோபம் அடைந்த முகமது அஷ்பாக், தன மாமியாரான குல்ஷானின் மூக்கை கடித்துள்ளார். அத்துடன் முகமது அஷ்பாக்கின் தந்தை குல்ஷானின் காதை கத்தியால் வெட்டியுள்ளார். 
 
இந்தக் தாக்குதலில் குல்ஷான் மயங்கி கீழே விழுந்தார். அதனால் பயந்து போன அஷ்பாக் அவரது தந்தை இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். 
 
பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடம் குல்ஷானை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த தாக்குத குறித்து போலிஸில் புகார் அளித்த நிலையில், குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஊருக்குள் மீண்டும் புகுந்த கடல் நீர்: மக்களின் நிலை என்ன?