ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: பலியோனோர் எண்ணிக்கை??

சனி, 31 ஆகஸ்ட் 2019 (13:54 IST)
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் தீ பிடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், தூலே மாவட்டத்தில் உள்ள ஷிர்பூர் ரசாயன தொழிற்சாலையில், இன்று காலை 09.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரசாயன தொழிற்சாலையில் 100 க்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாகவும் 13 பேர் படுகாயமடைந்ததாகவு தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு படையினரும் மீட்பு படையினரும் தீயை அணைக்க போராடி வந்த நிலையில் தற்போதைய நிலைமை குறித்து தகவல் வெளிவரவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் போராட்டம் போராட்டம்னா... பொருளாதாரம் எப்படி வளரும்? கொந்தளித்த தமிழிசை!