Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!

Advertiesment
மகள் காதல் திருமணம்..  பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!

Mahendran

, செவ்வாய், 11 மார்ச் 2025 (18:20 IST)
தெலுங்கானா மாநிலத்தில் பட்டியலினத்தை சேர்ந்தவரை மகள் காதல் திருமணம் செய்ததன் காரணமாக மருமகனை கொன்றதற்காக, பெண்ணின் உறவினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
தெலுங்கானா மாநிலத்தில், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை மாருதி ராவ் என்பவரின் மகள் அம்ருதா என்ற பெண் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்துக்கு எதிராக இருந்த பெண்ணின் தந்தை, கூலிப்படையை ஏவி  2018 ஆம் ஆண்டு மருமகன் பிரணாய் என்பவரை கொலை செய்தார்.
 
இந்த ஆணவக் கொலை வழக்கில், அம்ருதா தந்தை உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டு முதல் குற்றவாளி அம்ருதாவின் தந்தை மாருதிராவ் தற்கொலை செய்து கொண்டதால், அவர்மீது குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இரண்டாவது குற்றவாளியான சுபாஷ் சர்மாவிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
 
மேலும், அம்ருதாவின் மாமா உட்பட ஆறு பேர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?