Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை வைஜெயந்திமாலாவுக்கு என்ன ஆச்சு? மருமகள் கொடுத்த விளக்கம்..!

Advertiesment
நடிகை வைஜெயந்திமாலாவுக்கு என்ன ஆச்சு? மருமகள் கொடுத்த விளக்கம்..!

Mahendran

, சனி, 8 மார்ச் 2025 (12:52 IST)
பழம்பெரும் நடிகை வைஜயந்தி மாலா உடல் நலக்குறைவால் காலமாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இதற்கு விளக்கமாக, அவரது மருமகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
 
1949 ஆம் ஆண்டு "வாழ்க்கை" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான வைஜயந்தி மாலா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பிற்காக பல விருதுகளை பெற்ற அவர், திரைப்பட உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர்.
 
நடிகர் ராஜ்கபூரின் குடும்ப மருத்துவர் சமன்லால் பாலி என்பவரை திருமணம் செய்துகொண்ட வைஜயந்தி மாலாவுக்கு ஒரு மகன் உள்ளார்.
 
இந்நிலையில், வைஜயந்தி மாலா உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து, அவரது மருமகள் நந்தினி பாலி தனது சமூக வலைதளத்தில்,
 
"வைஜயந்தி மாலா நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவரை பற்றிய எந்தவிதமான செய்தியும் உண்மை அல்ல. செய்தியை பகிர்வதற்கு முன்பு தயவுசெய்து சரிபாருங்கள். ஆதாரமற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அதனால், வைஜயந்தி மாலா குறித்து பரவி வரும் செய்திகள் அனைத்தும் வெறும் வதந்தி என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணம் செய்யுங்கள்.. இல்லையேல் வேலையில் இருந்து நீக்கப்படுவீர்கள்.. பிரபல நிறுவனம் அறிவிப்பு..!