ஹரியானா மாநிலத்தில் சூட்கேசில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒருவர் காரணமாக இருக்கலாம் என அவரது தாய் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் தன்னுடைய மகள் கலந்து கொண்டதாகவும், அவரது கொலையில் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய ஒருவர்தான் சம்பந்தப்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"ராகுல் காந்தியுடன் என் மகளும் பாதயாத்திரையில் பங்கேற்றார். ஆனால், யாத்திரையின் பின் அவள் மீது சிலர் விரோதம் கொண்டிருந்தனர். இளம் வயதில் கட்சியில் அவருடைய வளர்ச்சி அனைவருக்கும் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.
"பிப்ரவரி 27ஆம் தேதி மாலை 4 மணி வரை நான் என் மகளுடன் இருந்தேன். அன்று மாலை, அவள் டெல்லி செல்ல வேண்டும் என்று கிளம்பி சென்றாள். மறுநாள், நான் என் மகளை அழைத்த போது அவளுடைய செல்போன் அணைக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர், அவர் இறந்த செய்தி தான் எனக்கு தெரிவிக்கப்பட்டது," என்றும் கூறியுள்ளார்.