Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணமான 5 நாட்களில் மணமகள் மாயம்! நகை, பணம் திருடி சென்றதால் அதிர்ச்சி..!

Advertiesment
திருமணமான 5 நாட்களில் மணமகள் மாயம்! நகை, பணம் திருடி சென்றதால் அதிர்ச்சி..!

Mahendran

, வியாழன், 6 மார்ச் 2025 (11:44 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில், திருமணம் ஆன ஐந்தே நாட்களில் மணமகள் திடீரென மாயமாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் கணவர் வீட்டிலிருந்து ரூ.3.5 லட்சம் பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
 
உத்தரபிரதேச மாநிலம் ஹோண்டா என்ற பகுதியில், ஐந்து நாட்களுக்கு முன்பு பெற்றோர்கள் தங்கள் மகனுக்கு மணமகளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணம் சிறப்பாக நடைபெற்ற நிலையில், புதிய ஜோடி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில், நேற்று இரவு மணமகள் மாயமாகிவிட்டார். அது மட்டுமின்றி, கணவர் வீட்டிலிருந்த பணமும் நகைகளும் திருடி சென்றுள்ளார். மேலும், இரவு நேரத்தில் மாமியார் மற்றும் மாமனாருக்கு தேநீர் கொடுத்து தூங்க வைத்ததாகவும், அதன் பிறகு பணம் மற்றும் நகைகளை எடுத்து விட்டு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
 
தேநீரில் தூக்க மருந்து கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்துடன், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான சில நாட்களிலேயே மணமகள் கணவர் வீட்டிலிருந்து திருடிச் சென்று மாயமான சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புழல் சிறையில் ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் சோதனை.. ஆய்வுக்கு பின் நீதிபதிகள் சொன்னது என்ன?