Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? என்ன விலை? – சீரம் இன்ஸ்டிடியூட் தகவல்!

Advertiesment
கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? என்ன விலை? – சீரம் இன்ஸ்டிடியூட் தகவல்!
, புதன், 29 ஏப்ரல் 2020 (11:27 IST)
இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி விலை மற்றும் கிடைக்கும் காலம் குறித்து அதன் இந்திய பிரிவு தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பல லட்சம் மக்கள் இறந்துள்ள நிலையில் அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் குழுவோடு இணைந்து சீரம் இண்ஸ்டிடியூட் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது பரிசோதனையில் இருக்கும் இந்த தடுப்பூசியானது மே மாதம் முதல் தயாரிப்பு பணிகள் தொடங்கபோவதாக சீரம் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். மே மாதம் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் முடிவடையும். இந்தியாவுக்கும் உலகத்திற்கும் தேவையான அளவு மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசியின் விலை உத்தேசமாத ரூ.1000 இருக்கலாம் என்றும், துல்லியமான புள்ளி விவரம் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கு கேப்புல இப்படி ஒரு திட்டமா? – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!