Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்கா குத்திய முத்திரையால் காண்டான இந்தியா!!

அமெரிக்கா குத்திய முத்திரையால் காண்டான இந்தியா!!
, புதன், 29 ஏப்ரல் 2020 (10:31 IST)
இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இதனை இந்திய வெளியுறவுத்துறை நிராகரித்துள்ளது. 
 
அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஐக்கிய அமெரிக்க ஆணையம் 2020 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத சுதந்திரத்தை மீறும் நாடுகளில் பர்மா, சீனா, ஈரான், நைஜீரியா உள்ளிட்ட 14 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன, அதில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
 
கடந்த 2004 முதலே இந்த நாடுகள் பட்டியலில் இந்தியா இருந்து வந்தாலும் சமீப காலமாக இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்தியாவில் அதிகரித்திருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்தியாவுக்கு எதிரான அந்த அமைப்பின் கருத்துக்கள் புதியவை இல்லை என்றாலும், இந்த முறை அதன் தவறான விளக்கம் புதிய நிலைகளை எட்டியுள்ளது. 
 
இந்தியா மீதான அந்த அமைப்பின் குற்றச்சாட்டை நான் நிராகரிக்கிறேன். இதனை இந்திய அரசு அந்த அமைப்பின் போக்கிலேயே கையாளும் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Oscars 2021: முக்கிய விதியில் மாற்றம்; அங்கீகாரம் பெறும் OTT படங்கள்!!