மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை அமல்படுத்த சரியான நேரம் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டத்தை வரும் ஜூன் மாதம் முதல் அமல்படுத்த படவுள்ளதாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் குடிமகன்கள் யார் வேண்டுமானாலும் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இப்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் வேறு மாநிலங்களில் தங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசுகள் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கின்றன. ஆதலால், அங்கு தங்கியிருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அனைத்துவிதமான அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.
இந்நிலையில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை' திட்டத்தை தற்போது அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது, ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.