கேரளா ஒரு மினி பாகிஸ்தான்.. ராகுலுக்கு தீவிரவாதிகள் வாக்களித்ததாக பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு..

Siva
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (12:44 IST)
கேரளா ஒரு மினி பாகிஸ்தான் என்றும், அதனால் தான் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய தீவிரவாதிகளுக்கு ஓட்டு போட்டுள்ளனர் என்றும் மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நிதிஷ் ராணா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் பாஜகவை சேர்ந்த நிதீஷ் ராணா, முதன்முறையாக அமைச்சராக இருப்பவர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.    கேரளா ஒரு மினி பாகிஸ்தான் ஆக மாறிவிட்டது என்று தெரிவித்தார். அதனால் தான், ராகுல் காந்திக்கும், அவரது சகோதரி பிரியங்கா காந்திக்கும், அங்குள்ள தீவிரவாதிகள் ஓட்டு போட்டுள்ளனர் என்றும் கூறினார். 
 
"நான் உண்மையைத்தான் சொல்கிறேன், தீவிரவாதிகளின் ஆதரவால் தான் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் எம்பி ஆகியுள்ளனர்," என்று அவர் கூறியுள்ளார்.
 
அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு பின் வரியை குறைத்த டிரம்ப்.. எத்தனை சதவீதம்?

கல்லூரி மாணவர்கள் வாந்தி, மயக்க விவகாரம்! பொய் செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை! - நாமக்கல் காவல்துறை!

ஒரே காரில் பயணம் செய்த ஓபிஎஸ் - செங்கோட்டையன்.. அரசியல் பேசினார்களா?

தஞ்சை கூலி தொழிலாளி மனைவிக்கு ரூ.60.41 லட்சம் வரி நிலுவை.. நோட்டீஸை பார்த்து அதிர்ந்த குடும்பத்தினர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments