Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடு காட்டில் பிரசவம்.. ஜீப்பை வழிமறித்த காட்டு யானை.. கணவருடன் சிக்கிய கர்ப்பிணி பெண்..!

நடு காட்டில் பிரசவம்.. ஜீப்பை வழிமறித்த காட்டு யானை.. கணவருடன் சிக்கிய கர்ப்பிணி பெண்..!

Mahendran

, வியாழன், 26 டிசம்பர் 2024 (11:40 IST)
கேரளாவில் கர்ப்பிணி பெண் ஒருவரை பிரசவத்திற்காக ஜீப்பில் அழைத்துச் சென்றபோது பிரசவ வலி வந்து ஜீப்பிலேயே குழந்தை பெற்றதாகவும், அப்போது காட்டு யானை ஜீப்பை வழி மறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

கேரளாவை சேர்ந்த சுஜய் சர்தார் என்பவரின் மனைவி சாம்பா என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது அவருக்கு திடீரென இரவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது கணவர் சாம்பாவை மருத்துவமனைக்கு தனது ஜீப்பில் அழைத்துச் சென்றார். அப்போது சாம்பாவுக்கு பிரசவ வலி அதிகமாகாததால் ஜீப்பில் ஆண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலையில், திடீரென காட்டு யானை வழிமறித்து ஜீப்பை வழிமறித்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு சாம்பாவின் கணவரிடம் தகவல் கூறிய நிலையில்,  உடனடியாக வனத்துறையினர் வந்து காட்டு யானையை விரட்டினர். அதன் பின் சாம்பா மற்றும் அவரது கணவர்  மருத்துவமனைக்கு சென்றனர்.

இப்போது சாம்பா மற்றும் அவருக்கு பிறந்த ஆண் குழந்தை இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தாயும் சேயும் நலம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? அண்ணா பல்கலை விவகாரம் குறித்து ஈபிஎஸ்